Paristamil Navigation Paristamil advert login

மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த இந்திய ஜோதிடர்..! பதற்றத்தை ஏற்படுத்திய திகதி

மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த இந்திய ஜோதிடர்..! பதற்றத்தை ஏற்படுத்திய திகதி

24 வைகாசி 2024 வெள்ளி 10:09 | பார்வைகள் : 382


மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான திகதிகள் குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் வெளியிட்டுள்ள தகவல் பேசப்பட்டு வருகிறது.

மூன்றாம் உலகப்போருக்கான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் பல தசாப்தங்களாக யூகிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது.

முதல் இரண்டு உலகப் போர்களின் தாக்கமே இன்னும் மக்கள் மனதில் அழியாமல் இருக்கும் நிலையில், மற்றொரு போர் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ரஷ்யா - நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை ஆகியவை மூன்றாம் உலகப் போரை தூண்டும் வகையில் உள்ளன.

மூன்றாம் உலகப் போர்கள் குறித்து நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், அதற்கு சாத்தியம் குறைவானதாகவே இருந்தாலும் இதுபோன்ற கணிப்புகள் அடிக்கடி வந்துகொண்டே தான் இருக்கின்றன.

இந்நிலையில், இந்திய ஜோதிடர் குஷால் குமார் மூன்றாம் உலகப்போர் குறித்த தனது கருத்தை 'லிங்க்டு இன்’-ல் பகிர்ந்துள்ளார்.

இந்திய ஜோதிடர் குஷால் குமார் ஒரு வேத ஜோதிடர் ஆவார். இவர், எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி முன்னறிவிப்பதற்காக கிரகங்களின் சீரமைப்பைக் காட்டும் விளக்கப்படங்களைப் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலில், "2024 மே 8-ம் திகதியில் போர் நிலைமைகள் மோசமாகியிருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதாவது, கொரியாக்கள், சீனா - தைவான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் தீவிரமடையும் என கணிக்கப்பட்டது.

சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது ராஜினாமா செய்யலாம். பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கட்டுப்பாட்டை எடுக்க ராணுவம் முன்வரலாம்.

தற்போது, 2024 ஜூன் 18-ம் திகதி மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலைகளைக் கொண்டுள்ளது. இருந்தாலும், ஜூன் 10 மற்றும் 29 ஆகிய திகதிகளையும் கூறலாம்" என்று தெரிவித்துள்ளார்.  


 

வர்த்தக‌ விளம்பரங்கள்