Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் “ஒசாமா பின் லேகர்” பீர் - முடங்கிய இணையதளம்

 பிரித்தானியாவில் “ஒசாமா பின் லேகர்” பீர் - முடங்கிய இணையதளம்

24 வைகாசி 2024 வெள்ளி 10:13 | பார்வைகள் : 2601


பிரிட்டனில் உள்ள ஒரு சிறிய பீர் தயாரிப்பு நிறுவனம், “ஒசாமா பின் லேகர்” ("Osama Bin Lager")என்ற பெயரில் தயாரித்த பீர் சமூக வலைதளங்களில் வைரலானதால், எதிர்பாராத சிக்கலை சந்தித்துள்ளது.

 லிங்கன்ஷயரின்(Lincolnshire) பில்லிங்ஹேயில்(Billinghay) அமைந்துள்ள மிட்செல் பிரூவிங் நிறுவனம்(The Mitchell Brewing Co) “ஒசாமா பின் லேகர்” பீரின் அதிகரித்த தேவையை காரணமாகக் காட்டி தற்காலிகமாக தங்கள் இணையதளத்தை மூடவும், தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மிட்செல் பிரூவிங் நிறுவனத்தின் தகவலின்படி, “ஒசாமா பின் லேகர்” பீர் என்பது சிட்ரஸ் சுவையுடன் கூடிய ஒரு லேசான லேகர் பீர் ஆகும். 

இந்த பீர் லேபிலில், 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடன் கார்ட்டூன் ஆக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

நிறுவனத்தின் இணை உரிமையாளர் லூக் மிட்செல், இந்த பெயர் தீவிரமான தலைவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இருப்பதாகக் கூறி பெயரை பாதுகாத்து வருகிறார்.

சிலர் இந்த கிண்டல் தவறானது என்று கருதலாம், ஆனால் இந்த லேபிள்கள் நிச்சயமாக கவனத்தை ஈர்த்துள்ளன.

 “ஒசாமா பின் லேகர்" பீர் சித்தரிக்கும் சமூக வலைதள பதிவுகள் வைரலாக பரவியதால், மிட்செல் பிரூவின் நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

நிறுவனம் இந்த சூழ்நிலையை சமாளித்து வருகிறது. பிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய மிட்செல், "கடந்த இரண்டு நாட்களாக, ஆயிரக்கணக்கான அறிவிப்புகளுடன் எழுந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்