வடகொரியாவில் விவாகரத்துக்கு தடை... கடுமையான விதிகள் அறிமுகம்
24 வைகாசி 2024 வெள்ளி 11:31 | பார்வைகள் : 3018
வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன், தன் நாட்டு மக்களுக்கு சில கடுமையான விதிகளை அறிமுகம் செய்துள்ளார்.
அவற்றில் ஒன்று, விவாகரத்துக்குத் தடை என்பது குறிப்பிடத்தக்கது.
தன் நாட்டு மக்கள் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றக்கூடாது என கருதும் கிம், விவாகரத்துக்கு தடை விதித்துள்ளார்.
விவாகரத்து என்பது அசாதாரண நடத்தை என அவர் கருதுவதாகவும், விவாகரத்து செய்தோர், சமூக பிரச்சினையாக கருதப்படுவார்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் யாராவது விவாகரத்து செய்தால், அவர்களுக்கு பதவி உயர்வோ, முக்கிய பதவிகளோ கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், விவாகரத்து செய்யும் பொதுமக்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்பது இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.
கிம் விதித்துள்ள இரண்டாவது விதி, இளைஞர்களின் மொபைல் போன்களை சோதனையிடுவதற்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ஆகும்.
வடகொரிய இளைஞர்கள், தென் கொரியாவின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார்களா என்பதை அறிவதற்காகவே இந்த சோதனை
அதாவது, தென் கொரிய மக்கள் மொழியைப் பயனப்டுத்தும் விதத்தில் வடகொரிய மக்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொபைல் விதியை மீறுவோர், சித்திரவதை முகாம் போன்ற கடினமான வேலைகளைச் செய்ய வற்புறுத்தப்படும் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்நிலையில், இப்படி ஒரு விதியை அறிமுகம் செய்வதற்கு, அரசு மொபைல் போன்களை விற்பனை செய்யாமலே இருக்கலாமே என்கிறார்கள் இளைஞர்கள்.