Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக்க அணுகிய பிசிசிஐ

அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக்க அணுகிய பிசிசிஐ

24 வைகாசி 2024 வெள்ளி 11:59 | பார்வைகள் : 344


அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது.

இதனால் பிசிசிஐ புதிய பயிற்சியாளருக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்கை பிசிசிஐ அணுகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ரிக்கி பாண்டிங், இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆவது குறித்த தனது கருத்தை தெரிவித்தார்.  

அவர் கூறுகையில், ''நான் இதைப் பற்றிய நிறைய அறிக்கைகளைப் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக இவைகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வதற்கு முன்பே இவை சமூக ஊடகங்களில் பரவும். 

ஆனால், ஐபிஎல்லின்போது ஒரு சில சிறிய உரையாடல்கள் இருந்தன. நான் அதை செய்வேனா என்ற ஆர்வத்தை என்னிடம் இருந்து பெற வேண்டும்.

ஒரு தேசிய தலைமை பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலை ஆகும். 

நான் அதை செய்ய விரும்பும் அளவுக்கு, அது இப்போது எனது வாழ்க்கை முறைக்கும், நான் மிகவும் ரசிக்கும் விடயங்களுக்கும் பொருந்தாது'' என தெரிவித்துள்ளார்.


ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) அவுஸ்திரேலிய அணிக்கு தலைவராக செயல்பட்டு 2003, 2007 ஆண்டுகளில் உலகக்கிண்ணங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.    

வர்த்தக‌ விளம்பரங்கள்