Paristamil Navigation Paristamil advert login

பப்புவா நியூ கினியா உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பப்புவா நியூ கினியா உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

25 வைகாசி 2024 சனி 07:18 | பார்வைகள் : 5051


பப்புவா நியூ கினியா காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணி க்கை 300க்கும் மேல் உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடங்கள் இன்று தெரிவித்துள்ளன.

நேற்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர். 

இதனையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், இந்த நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 300க்கும் மேல் உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடங்கள் இன்று தெரிவித்துள்ளன.

இதுகுறித்து எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் தெரிவிக்கையில், "இந்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன" என்றார்.

இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படு வருவதாக கூறப்படுகின்றது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்