பரிஸ் : 82 வயது பெண் மீது பாலியல் தாக்குதல் முயற்சி!

25 வைகாசி 2024 சனி 09:08 | பார்வைகள் : 8908
82 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள uttes-Chaumont பூங்காவின் அருகே உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கு தனியாக வசிக்கும் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
அதையடுத்து அவர் சத்தம் எழுப்பியுள்ளார். சத்தத்தைக் கேட்டு அருகில் வசிக்கும் ஒருவர் ஓடிச் சென்றுள்ளார். ஆனால் அவர் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் குறித்த நபரை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1