Paristamil Navigation Paristamil advert login

■ நீண்ட தூரம் பயணிக்கும் மெற்றோவாக மாறும் ligne 14..! - புதிய நிலையங்கள் திறப்பு..!

■ நீண்ட தூரம் பயணிக்கும்  மெற்றோவாக மாறும் ligne 14..! - புதிய நிலையங்கள் திறப்பு..!

25 வைகாசி 2024 சனி 09:31 | பார்வைகள் : 4910


14 ஆம் இலக்க தானியங்கி மெற்றோக்கள் ஓர்லி விமான நிலையம் முதல் Saint-Denis-Pleyel வரை பயணிக்க உள்ளது. புதிய நிலையங்கள் வரும் ஜூன் 24 ஆம் திகதி திறக்கப்பட உள்ளன.

மொத்தமாக எட்டு புதிய நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. Maison Blanche, Hôpital Bicêtre, Villejuif-Gustave Roussy, L'Haÿ-Les-Roses, Chevilly-Larue, Thiais ஆகிய நிலையங்களுடன் Saint-Denis Pleyel  நிலையமும் திறக்கப்பட உள்ளன. இதனால் பரிசில் உள்ள மெற்றோக்களில் அதிக தூரம் பயணிக்கும் மெற்றோவாக 14 ஆம் இலக்க மெற்றோ மாறியுள்ளது. முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இந்த மெற்றோ இயக்கப்பட உள்ளது. 

ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து, போட்டிகள் ஆரம்பமாவத்ற்கு ஒரு மாதம் முன்பாக ஜூன்  24 ஆம் திகதி திறக்கப்பட உள்ளன. 

Saint-Denis Pleyel நிலையத்தில் இருந்து மத்திய பரிசுக்கு 40 நிமிடங்களில் வந்தடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாள் ஒன்றுக்கு 700,000 பயணிகள் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக RATP அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்