Paristamil Navigation Paristamil advert login

Fleury-Mérogis : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

Fleury-Mérogis : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

25 வைகாசி 2024 சனி 13:55 | பார்வைகள் : 8246


Fleury-Mérogis (Essonne) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

 

மே 25, இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அங்கு தனியார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அதன் போதே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும்,  அதில் ஒருவர் கொல்லப்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கூட்டர் ஒன்றில் வந்த இருவர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்