அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

26 வைகாசி 2024 ஞாயிறு 05:51 | பார்வைகள் : 11250
அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்துகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டதால் இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து கவர்னர் ஜெப் லாண்ட்ரி அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதன்மூலம் இந்த இரு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
எனவே மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இன்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த தெரிவித்து வருகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2