110 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட 55 வயதுடைய பெண்...

23 ஆவணி 2023 புதன் 10:17 | பார்வைகள் : 13653
வடமேற்கு பாகிஸ்தானின் மன்சேரா நகரில் 110 வயது முதியவரான அப்துல் அன்னாஸ் என்பவருக்கு 55 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் அப்துல் அன்னாஸ்க்கு நான்காவது திருமணம் ஆகும்.
இந்த திருமணத்தில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இவருக்கு, இதற்கு முன்பு நடந்த 3 திருமணங்களின் படி, 12 குழந்தைகள் உட்பட 84 உறுப்பினர்கள் இவரது குடும்பத்தில் உள்ளனர்.
70 வயதாகும் அப்துல் அன்னாஸ் தனிமையில் இருப்பதாக உணர்ந்துள்ளார்.
பின்பு இவர், 5 ஆயிரம் ரூபாயை வரதட்சணையாக கொடுத்து 55 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இவர், திருமணத்தின் போது மனைவியின் கைகளில் வளையலை போடுவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் அதே மாவட்டத்தை சேர்ந்த 90 வயது முதியவருக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025