Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்ட உக்ரைன்

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்ட உக்ரைன்

26 வைகாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2275


ரஷ்யா நாடானது உக்ரைனுடன் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்திய பகுதிகளை கைப்பற்றியது.

தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், வடகிழக்கின் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் கார்கிவ்வின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லை பகுதிகள் நமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதற்கு முன்னர் அந்த பகுதிகளுக்குள் ஆக்கிரமிப்பு படையினர் நுழைந்திருந்தனர் என்றார் அவர்.

இருந்தாலும் கார்கிவ் நிலவரம் குறித்து ரஷ்ய தரப்பினர் கூறும் தகவல் இதற்கு முரணாக உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்