ரஃபா நகர் மீது இஸ்ரேல் திடீர் ராக்கெட் தாக்குதல் - 35 பேர் பலி
27 வைகாசி 2024 திங்கள் 06:09 | பார்வைகள் : 2069
இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 7 மாதங்களாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இஸ்ரேலின் டெல்-அவிவ் நகர் மீது ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவினர் பெரிய ராக்கெட் தாக்குதலை நேற்று நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் தெரிய வராத நிலையில், சைரன்கள் ஒலித்ததற்கான காரணத்தை இஸ்ரேல் வெளியிடவில்லை..
இஸ்ரேல் மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று நடத்திய ராக்கெட் தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை தூண்டியது.
இந்த நிலையில், தெற்கு காசாவின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் திடீர் ராக்கெட் தாக்குதலை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் 35 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ஏவிய இந்த ராக்கெட்கள் கைவிடப்பட்ட மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை தாக்கி இருப்பதாக பாலஸ்தீன மருத்துவ குழு தெரிவித்துள்ளது.