ஆட்சியில் நீடிக்க பா.ஜ., எதையும் செய்யும் - பிரியங்கா புகார்

27 வைகாசி 2024 திங்கள் 08:39 | பார்வைகள் : 7009
பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க மட்டுமே விரும்புகிறது. அவர்கள் ஆட்சியில் நீடிக்க எதையும் செய்வார்கள்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் சம்பா பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:
பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க மட்டுமே விரும்புகிறது. அவர்கள் ஆட்சியில் நீடிக்க எதையும் செய்வார்கள். இந்த அரசியலின் விளைவுதான் அக்னிவீர் திட்டம். இதற்கு அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இந்த பணம் கோடீஸ்வரர்களிடமிருந்து வருகிறது, எனவே அவர்கள் இந்த கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.
மோடி அரசின் கொள்கைகள், கோடீஸ்வரர்களை இலக்காகக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பணமில்லை என்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்ததால், மழைக்காலப் பேரழிவின் போது மத்திய பா.ஜ., அரசு இங்கு பாரபட்சமாக நடந்துகொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025