பரிஸ் : நான்காவது தளத்தில் இருந்து விழுந்த காவல்துறை வீரர் - படுகாயம்.
27 வைகாசி 2024 திங்கள் 10:44 | பார்வைகள் : 7833
காவல்துறை வீரர் ஒருவர் நான்காவது தளத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார். பரிசில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
14 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த வீரர், நேற்று மே 26, ஞாயிற்றுக்கிழமை பகல், கடமையில் இல்லாத நேரத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan