இஸ்ரேலின் தாக்குதலில் கோபமடைந்த ஜனாதிபதி மக்ரோன்.!
27 வைகாசி 2024 திங்கள் 11:07 | பார்வைகள் : 4252
Rafah பகுதியில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 35* பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
'இந்த தாக்குதலினால் நான் கோமடைகிறேன். சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மரியாதை செலுத்தவும், உடனடி போர் நிறுத்தத்தை கொண்டுவரவும் நான் அழைப்பு விடுக்குறேன்!' என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
Rafah பகுதியில் உள்ள குறித்த அகதி முகாம் பாலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பற்ற பகுதியாக மாறி வருகிறதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று மே 26, ஞாயிற்றுக்கிழமை காலை இந்த தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டிருந்தது. குறித்த அகதி முகாமுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழு பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததாகவும், அதை அடுத்தே தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.