கேசால் தீவில் மூன்று நாட்கள் சிக்கித்தவித்த நபர்!
23 ஆவணி 2023 புதன் 10:46 | பார்வைகள் : 18593
பஹாமாஸைச் சேர்ந்த 64 வயது நிரம்பிய குறித்த நபர் பாய்மரப் படகில் கடற்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில் படகு பழுதடைந்து கேசால் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது.
அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்துள்ளார்.
பின்னர், அவசரகால சூழ்நிலைகளில் உதவிக்கு அழைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனமான சுடரை அவ்வப்போது எரிந்துள்ளார்.
மேலும் குறித்த தீவில் சிக்கி 3 நாட்கள் ஆன நிலையில் அந்த வழியாக அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றனர்.
அப்போது, படகில் இருந்து வெளிப்பட்ட சிவப்புநிற ஒளியை பார்த்து, யாரோ உதவிக்கு அழைப்பதை அறிந்தனர்.
உடனடியாக தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ரேடியோ கருவி மற்றும் படகில் உள்ள நபருக்கு உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கீழே போட்டுள்ளனர்.
பின்னர் அந்த நபர், ரேடியோ முலம் கடலோர காவற்படையை தொடர்புகொண்டு 3 நாட்களாக தீவில் தவிப்பதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த நபரை மீட்டு ராயல் பஹாமாஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan