Paristamil Navigation Paristamil advert login

IPL மைதான ஊழியர்களுக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?- BCCI செயலாளர் ஜெய்ஷா

IPL மைதான ஊழியர்களுக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?- BCCI செயலாளர் ஜெய்ஷா

27 வைகாசி 2024 திங்கள் 12:30 | பார்வைகள் : 871


IPL கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று 26 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.  

இந்தியாவில் தேர்தல் நடைபெறவ இருந்தமையால் போட்டி அட்டவணை வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டு, முதற் கட்டமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மாத்திரமே வெளியிடப்பட்டது.

அதையடுத்து இரண்டாம் கட்ட போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அனைத்து அணிகளும் விளையாடி ஒவ்வொரு அணியாக தோல்வியுற்று வெளியேறியது.

கடந்த செவ்வாய்க்கிழமை (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்ற கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதேபோன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுக்கடையேயான இறுதிச் சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதையடுத்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதின.

அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சேம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

தற்போது பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், BCCI செயலாளர் ஜெய்ஷா மைதான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்றை அறிவித்துள்ளார். 

IPL கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

கடினமான வானிலை நிலைகளிலும் கூட, அற்புதமான ஆடுகளங்களை வழங்க அயராது உழைத்த ஊழியர்களை பாராட்டும் விதமாக இந்த பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக BCCI செயலாளர் ஜெய்ஷா தனது X தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்