பிரித்தானிய பொதுத்தேர்தல் - சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
27 வைகாசி 2024 திங்கள் 14:00 | பார்வைகள் : 2738
பிரித்தானிய பொதுத்தேர்தல் ஜூலை மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்...? எந்தக் கட்சிக்கு எத்தனை இருக்கைகள் கிடைக்கும் என்பது தொடர்பிலான கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், DeltapollUK என்னும் அமைப்பு, வார இறுதியில் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இம்மாதம், அதாவது, மே மாதம் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்தப்பட்ட அந்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.
கருத்துக்கணிப்புகளின் முடிவுகள், தேர்தலில், லேபர் கட்சி 22 புள்ளிகள் முன்னிலை பெறும் என்று கூறியுள்ளன.
லேபர் கட்சிக்கு மக்களிடையே 45 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும்,
அதைத் தொடர்ந்து ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், Reform கட்சிக்கும் 23 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும்,
லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 9 சதவிகிதம் வாக்குகளும், கிரீன்ஸ் கட்சிக்கு 6 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறுகின்றன கருத்துக்கணிப்புகள்.
ஆக, பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றி லேபர் கட்சிக்கே என்கின்றன கருத்துக்கணிப்புகள்.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும், லேபர் கட்சியே பெரும்பான்மை இருக்கைகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.