Paristamil Navigation Paristamil advert login

வட கொரியா உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டம்

வட கொரியா உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டம்

27 வைகாசி 2024 திங்கள் 14:25 | பார்வைகள் : 2612


வட கொரியா ஜூன் 4 ஆம் திகதிக்குள் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக ஜப்பான் தகவல் தெரிவித்துள்ளது.

வட கொரியா மே 27 முதல் ஜூன் 4 க்குள் ஒரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

 இந்த அறிவிப்பு, Pyongyang கடந்த 2023 நவம்பரில் தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிய சில மாதங்களிலேயே வந்துள்ளது.

இந்த எட்டு நாள் ஏவு சாளரம், தற்போது சியோலில் நடந்து வரும் ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் உச்சி மாநாட்டுடன் ஒத்துப்போகிறது.

 இந்த நடவடிக்கை சர்வதேச தடை உத்தரவுகளை மீறும் ஏவுகணை சோதனை என சிலர் கருதுவதால் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

இந்த ஏவுதல் செயற்கைக்கோள் ஏவுகணை மூலம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏவுகணையின் வீழ்ச்சியடையக்கூடிய பாகங்கள் கொரியன் தீபகற்பத்திற்கு அருகிலும், பிலிப்பைன்ஸ் தீவுகளான லூசான் அருகிலும் மூன்று கடல் ஆபத்து மண்டலங்களிலும் விழ வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் கண்டறிந்துள்ளது. 

இது வட கொரியாவின் முந்தைய ஏவுகணை சோதனைக்கு எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போன்றதே.

வட கொரியாவின் தொடர்ச்சியான ராணுவ நவீனமயமாக்கல் முயற்சிகளைக் குறிக்கும் வகையிலேயே இந்த ஏவு திட்டம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

கூடுதல் உளவு செயற்கைக் கோள்களை பயன்படுத்துவது Pyongyang-வின் உளவு திரட்டும் திறனை, குறிப்பாக தென் கொரியா மற்றும் அதன் நட்பு நாடுகளை குறிவைத்து மேம்படுத்தலாம். 

இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யக்கூடும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்