Paristamil Navigation Paristamil advert login

Bondy : கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய மகிழுந்து காவல்துறையினரின் வாகனத்தை மோதியது!

Bondy : கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய மகிழுந்து காவல்துறையினரின் வாகனத்தை மோதியது!

27 வைகாசி 2024 திங்கள் 14:26 | பார்வைகள் : 10058


மகிழுந்து சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி, வேகமாக பயணித்ததுடன், காவல்துறையினரின் வாகனம் மீதும் மோதியுள்ளார்.

இச்சம்பவம் Bondy (Seine-Saint-Denis) நகரை ஊடறுக்கும் A86 நெடுஞ்சாலையில் நேற்று மே 26, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திடமான மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து பயணித்து, காவல்துறையினரின் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளது. 

மகிழுந்தைச் செலுத்தியவர் சில நிமிடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் நிறைந்த மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தில் காவல்துறையினர் யாரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்