இயக்குநராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்..

27 வைகாசி 2024 திங்கள் 14:26 | பார்வைகள் : 5740
தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் சிலரே. அப்படி தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையாக கடந்து தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி அதன் பின் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மெரினாவில் தொடங்கி தற்போது வரை தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சிவகார்திகேயன்.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் ஊருவகியுள்ளனர், நடிகராக பலரது நெஞ்சங்களில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தார். கனா படத்தில் தொடங்கி தற்போது வரை பல படங்களை தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் இயக்குனராக களமிறங்கவுள்ளார். ஆம், சிவகார்த்திகேயன் இயக்கவிருக்கும் படத்தின் கதையை முதன் முதலில் தனது நண்பரும், சக நடிகருமான சூரியிடம் தான் கூறியுள்ளார், மேலும் கதாநாயகனாக நடிக்க சூரியிடம் தான் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சூரியிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த சூரி, " நல்ல கதை ஒன்று உள்ளது அதை நீங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் தம்பி என்னிடம் கூறினார், நிச்சயம் நான் செய்வேன் நேரம் வரும்போது பண்ணலாம் என்று முன்பு நாங்கள் முடிவு செய்திருந்தோம். அவருக்கு எப்போது டைம் கிடைத்து கதை எல்லாம் ரெடியாகிறதோ அப்போது நிச்சயம் அவர் இயக்கத்தில் நான் நடிப்பேன், இப்போ கூட நான் ரெடி" என்று நடிகர் சூரி பதிலளித்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1