Paristamil Navigation Paristamil advert login

இனி எங்கே போவது? - ரபாவில் இஸ்ரேல் தாக்குதலில் சிக்கிய மக்கள்

இனி எங்கே போவது? - ரபாவில் இஸ்ரேல் தாக்குதலில் சிக்கிய மக்கள்

28 வைகாசி 2024 செவ்வாய் 08:50 | பார்வைகள் : 355


காசாவில் அல் அட்டார் குடும்பத்தினர் தொழுகையில் ஈடுபட்ட பின்னர் பிள்ளைகளை உறங்கவைப்பதில் ஈடுபட்டிருந்தவேளை அவர்களின் கூடாரத்திற்கு வெளியே  பாரிய சத்தமொன்றை கேட்டனர்.

சிறுவர்கள் அலறத்தொடங்கினார்கள்.

இஸ்ரேல் மீண்டும் காசாவை அழித்துக்கொண்டிருந்தது.

ரபா நகரின் டெல் அல் சுல்தான் என்ற பகுதியில் இடம்பெயர்ந்த மக்களிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து  பாரிய தீ பரவியது.

அச்சமடைந்த மக்கள் கூடாரங்களில் இருந்து தப்பி வெளியே ஒடினார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் அறை குண்டுச்சிதறல்களால் நிரம்பிக்காணப்பட்டது பலதொன் அளவுள்ள ஏவுகணைகள் அல்லது குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன என உம் முகமட் அல் அத்தார் தெரிவித்தார்.

சிதைவடைந்த முகாமின் கூடாரங்கள் நெளிந்த இரும்புகள் போன்றவற்றை பார்வையிட்டவாறு அவர் இதனை எங்களிற்கு தெரிவித்தார்.

ஊனமுற்ற குழந்தையுடன் தனது அறையின் வாசலில் பெண் ஒருவர் தியாகியானார். அவள் செய்த குற்றம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

எங்கள் அயலவர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தியாகியானார் அவரது மூளை சுவரில் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

45 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை காரணமாக உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்இஇஸ்ரேலின் இராணுவ வழக்குரைஞர் இது மிகவும் பயங்கரமான விடயம் என தெரிவித்துள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் இஸ்ரேலிய படையினர் ரபாவில் தரை நடவடிக்கைகளை ஆரம்பித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் டெல் அல் சுல்தான் பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இரவு இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அதிகாலையில் மக்கள் இடிபாடுகளின் மத்தியில் தங்கள் உடமைகளை தேட ஆரம்பித்தனர்.

மனல்சமன் என்ற பெண் எரிந்த பொருட்களின் நடுவில் தேடிக்கொண்டிருந்தார்.

நாங்கள் இடம்பெயர்ந்து இந்த இடத்தில்தான் தங்கியிருந்தோம்நாங்கள் கூடாரங்களில் இருந்தோம் தீடிரென எங்கள் மீது இந்த இடத்தில் ரொக்கட்கள் விழுந்து வெடித்தன என அவர் தெரிவிக்கின்றார்.

நாங்கள் எங்கு செல்வது என தெரியாத நிலையிலிருந்தோம் இரவு இருட்டு அம்புலன்ஸ்கள் இல்லை நாங்கள் திருப்பிபார்;த இடங்களில் எல்லாம் தியாகிகள் காணப்பட்டனர் என தெரிவித்த அவர் நாங்கள் மீண்டும் இடம்பெயர்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது தற்காலிக வீட்டிலிருந்து பொருட்களை மீட்டுக்கொண்டிருந்த தலால் சயீட் சல்மான் தாங்கள்எட்டாவது தடவை இடம்பெயர்வதாக தெரிவித்தார்.

நாங்கள் எங்கு போவது எங்களிற்கு தெளிவுபடுத்துங்கள் நாங்கள் எங்கே செல்வது என அவர் கேள்வி எழுப்பினார்.

எத்தனை காலத்திற்கு எங்களை இப்படி கேவலப்படுத்தப்போகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்