Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள புதிய வைரஸ் -  பகீர் தகவல்..!

சீனாவில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள புதிய வைரஸ் -  பகீர் தகவல்..!

28 வைகாசி 2024 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 1029


சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளது.

இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது.

சீனா உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக அமையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது . 

சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர்.

இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவ கூடியதாக உள்ளது. 

எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயின.

கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு, அறிகுறி குறித்து ஆய்வு செய்யப்பட்டதன் நோக்கம் என தெரிவித்த சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகம் பல கோடி மக்கள் உயிரிழந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை உருவாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்