Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பில் புதிய ஒழுங்குவிதி!

இலங்கையில் தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பில் புதிய ஒழுங்குவிதி!

23 ஆவணி 2023 புதன் 16:06 | பார்வைகள் : 2742


தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியுள்ளாரா என ஆராய உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் விசாரணை அதிகாரி ஒருவரும் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டதுடன், அவர்கள் இது தொடர்பாக பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இதன்படி, தேசிய கீதத்தை எவ்வாறு பாடுவது என்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் இருந்தாலும், தேசிய கீதம் இடைப்பட்ட சுருதியில் பாடப்பட வேண்டும் என்று மட்டுமே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

எவ்வாறாயினும், உமாரா சின்ஹவன்ச தேசிய கீதத்தை அதிக சுருதியில் பாடியுள்ளதாக குழு கண்டறிந்துள்ளதுடன், அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

விசாரணைக் குழு இது தொடர்பான அறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் அண்மையில் கையளித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்