இந்தோனேசியாவில் முகம் பார்க்காத காதல் ஏமாற்றத்தில் முடிந்த திருமணம்...
28 வைகாசி 2024 செவ்வாய் 09:50 | பார்வைகள் : 2257
இந்தோனேசியாவில் திருமணம் முடிந்த 12 நாட்களுக்கு பிறகு மனைவி ஒரு ஆண் என தெரியவந்ததால் கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் திருமணம் முடிந்து 12 நாட்களுக்கு பிறகு மனைவி அதிண்டா கான்சா, வேடமிட்ட ஆண் என்பதை அறிந்து கணவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
AK என அடையாளம் காட்டப்படும் 26 வயது மணமகன் அதிண்டாவை 2023 இல் இணையதளம் வழியாக சந்தித்து, விரைவிலேயே காதலில் விழுந்தார்.
அதிண்டாவை நேரில் சந்தித்தபோது, அதிண்டா எப்போதும் பாரம்பரிய முஸ்லிம் உடையான புர்கா அணிந்திருந்தார்.
ஆரம்பத்தில் இதனால் சஞ்சலப்படாத AK, இது அவரது மத பக்தியின் அடையாளம் என்று கருதினார்.
இதையடுத்து ஏப்ரல் மாதம் AK வீட்டில் சிறிய அளவில் திருமணம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான சில விஷயங்கள் விரைவில் தென்பட்டன.
அதிண்டா தொடர்ந்து முகத்தை மறைத்து வைத்து இருந்துள்ளார்.
மேலும் AKவின் குடும்பத்தினருடனும் பழகுவதைத் அவர் தவித்து வந்துள்ளார்.
அத்துடன் திருமண தாம்பத்திய உறவுக்கும் மாதவிடாய், உடல்நலக்குறை போன்ற காரணங்களைச் சொல்லி அதிண்டா AKவின் முயற்சிகளை திசை திருப்பி விட்டுள்ளார்.
12 நாட்கள் கழித்து சந்தேகம் வந்த AK விசாரிக்க தொடங்கியுள்ளார்.
அப்போது, அதிண்டாவின் பெற்றோர் உயிருடன் இருப்பதையும், இந்த திருமணம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதையும் அவர் கண்டறிந்தார்.
அதிர்ச்சியூட்டும் வகையில், "அதிண்டா" உண்மையில் ESH, 2020 முதல் பெண் வேடம் பூண்டு வருபவர் என்பதையும் அவர் அறிந்தார்.
பின் பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்த போது AKவின் குடும்பத்தின் சொத்துக்களை திருடவே அவரை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டார்.