2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுப்பிடிப்பு
28 வைகாசி 2024 செவ்வாய் 10:06 | பார்வைகள் : 1702
சிவப்பு ரத்தினத்தால் அமைக்கப்பட்ட மோதிரம் ஒன்று இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரத்தை கண்டுப்பிடித்துள்ளனனர்.
இது சமீபத்தில் டேவிட் நகர தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சி குழுவின் உறுப்பினரான தெஹியா கங்கேட்டால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் சிறிய அளவு காரணமாக மோதிரம் ஒரு குழந்தைக்கு சொந்தமானது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த மோதிரம் கிமு 300 க்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.