Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண் 5 வருடங்களின் பின் உயிரிழப்பு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண் 5 வருடங்களின் பின் உயிரிழப்பு

28 வைகாசி 2024 செவ்வாய் 13:12 | பார்வைகள் : 2001


இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறுத் தினமான ஏப்ரல் 21ஆம் திகதி, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து  தீவிர சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த திலினி ஹர்ஷனி என்பவரே  உயிரிழந்துள்ளார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்திலேயே உயிரிழந்திருந்தார். படுகாயமடைந்த  திலினி ஹர்ஷனிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் நட்சத்திர ஹோட்டல்கள், தேவாலயங்களை இலக்கு வைத்து 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், 273 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்