பரிசில் இருந்து மீண்டும் அகதிகள் வெளியேற்றம்!
28 வைகாசி 2024 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 3415
சென் நதிக்கரைகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர், இன்று மே 28 செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
தலைநகர் பரிசில் உள்ள Pont-Marie அருகே வசித்த நூற்றுக்கண அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர். “Utopia 56” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர், அகதிகளை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அகதிகளில் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் Lyon (Rhône) நகரில் உள்ள அகதிகள் வரவேற்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஏனைவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, இல் து பிரான்ஸ் முழுவதும் இருந்து அகதிகள் வெளியேற்றப்பட்டு நாடின் வேறு நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பணிகள் இவ்வருட ஆரம்பம் முதலே இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.