இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் - கொலம்பியா ஜனாதிபதி

28 வைகாசி 2024 செவ்வாய் 15:43 | பார்வைகள் : 10575
உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் காணப்படுகின்றன.
கொலம்பியா ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ என தெரிவித்துள்ளார்.
வலுவான ஜனநாயக நாடுகளில் உள்ள வங்கிகள் நிதி அமைப்புகளின் உரிமையாளர்கள் காசாவில் இடம்பெறும் படுகொலைகளை ஆதரிப்பவர்களாக காணப்படுவதால் இந்த ஜனநாயக நாடுகளால் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஜனநாயக நாடுகளின் செயற்பாடுகள் பாலஸ்தீன மக்களின் இருப்பிற்கு மாத்திரம் ஆபத்தை ஏற்படுத்தவில்லை ஜனநாயகம் மனித குலத்தின் இருப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலின் அதிகாரம் என்பது வெறுமனே பெரும் பணத்தை சேர்த்தல் மற்றும் போர் விமானங்களை தவிர வேறு ஒன்றில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலின் யுத்தத்திற்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருபவர் கொலம்பிய ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025