சூரி மீண்டும் கதையின் நாயகனாக வெற்றி பெறுவாரா ?

29 வைகாசி 2024 புதன் 13:48 | பார்வைகள் : 3934
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முக்கிய நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே கதாநாயகர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும், சிலர் இன்னும் தங்களை கதையின் நாயகன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் கதையின் நாயகர்களாக மாறிவிட்டார்கள். சந்தானம், யோகி பாபு சில படங்களில் கதாநாயகர்களாக நடித்துவிட்டார்கள். சூரி இப்போதுதான் இரண்டாவது படத்திற்கு வந்திருக்கிறார்.
அவர் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த 'விடுதலை' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' படம் நாளை மறுதினம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. போட்டிக்கு வேறு முக்கிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் 'கருடன்' படத்திற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.