Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான தகவல்!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான தகவல்!

29 வைகாசி 2024 புதன் 15:21 | பார்வைகள் : 780


நாட்டின் அரசியலமைப்பின் படி, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய நூதனசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிர்ணயம் செய்யப்படும் திகதியில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்பதுடன், அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனையடுத்து, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்