கனடாவில் அதிகரிக்கும் மரணங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
29 வைகாசி 2024 புதன் 15:56 | பார்வைகள் : 2702
கனடாவில் நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் சில மாகாணங்களில் இவ்வாறு நீரில் மூழ்கி பதிவாகும் மரணங்கள் அதிகரித்துள்ளன.
இந்தக் கோடை காலத்தில் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சில நொடிகளில் ஒருவர் நீரில் மூழ்கி மரணிக்கக் கூடும் எனவும் இதனால் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மாகாணத்தில் 211 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.