Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உட்பட 10 பேர் பலி

ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உட்பட 10 பேர் பலி

24 ஆவணி 2023 வியாழன் 07:04 | பார்வைகள் : 14754


ரஷ்யாவில் வாக்னர் எனும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது.

இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தக் கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார். அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷ்யாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவின் டிவெர் மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் 10 பேர் பலியானார்கள் என்றும், அதில் வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசினும் ஒருவர் என அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விமான பயணிகள் பட்டியலில் பிரிகோசின் பெயர் உள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பிரிகோசின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.

வர்த்தக‌ விளம்பரங்கள்