Paristamil Navigation Paristamil advert login

புளோரிடாவில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்

புளோரிடாவில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்

30 வைகாசி 2024 வியாழன் 08:48 | பார்வைகள் : 4966


அமெரிக்காவின் புளோரிடாவின் பிளைன்ட் சிட்டியில் உள்ள பப்ளிக்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் (Plant City Publix)மர்ம நபர் ஒருவர் கடைக்குள் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 வயதான ஒருவர் திடீரென்று தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 6:30 மிணிக்கு சற்று பிறகு, வால்டன் வூட்ஸ் ஷாப்பிங் பிளாசாவில் உள்ள பப்ளிக்ஸ் கடையில் குழப்பம் நிலவுகிறது என்ற அழைப்பு காவல் துறைக்கு வந்தது. 

பிளைன்ட் சிட்டி காவல் துறையின்(Plant City Police Department) தகவல்படி, 

கடைக்குள் ஒருவர் தீப்பிழம்பில் சிக்கி இருப்பதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, தீயணைப்பான் வந்து சேருவதற்கு முன்பே அங்கிருந்தவர்கள் தீயை அணைத்துள்ளனர். 

பின்னர் அந்த நபர் அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீ வைத்துக் கொள்ள எரிபொருள் ஒன்றை அந்த நபர் பயன்படுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்