Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்தில்  சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை

தாய்லாந்தில்  சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை

30 வைகாசி 2024 வியாழன் 09:45 | பார்வைகள் : 2235


தாய்லாந்தின் அமைச்சரவை  இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விசா சேவை மேம்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தின் அமைச்சரவை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பல விசா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது 30 நாட்களுக்கு மேல் தங்க திட்டமிட்டுள்ள 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனலிக்கும் விதமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  

ஜூன் 1 ஆம் திகதி முதல், விசா இல்லாத நுழைவுக்கு தகுதியான நாடுகளின் எண்ணிக்கை 57ல் இருந்து 93 ஆக உயரும், விசா இல்லாத தங்கும் காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்படும்.

புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளில்  இலங்கை, லாவோஸ், அல்பேனியா, கம்போடியா, சீனா, இந்தியா, ஜமைக்கா, கஜகஸ்தான், மெக்சிகோ, மொராக்கோ, பனாமா, ருமேனியா, உஸ்பெகிஸ்தான் போன்றவை அடங்குகின்றன.

இந்த முயற்சி தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காகவும் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது வேலை செய்ய விரும்பும் பார்வையாளர்கள் 180 நாட்கள் வரை தங்குவதற்கு செல்லுபடியாகும் ஐந்து வருட விசாக்களைப் பெறலாம், மேலும் 180 நாட்களுக்கு நீடித்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்