கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது
30 வைகாசி 2024 வியாழன் 10:56 | பார்வைகள் : 1633
தென்மேற்கு பருவமழை, கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில் இன்று(மே 30) துவங்கியது.
தென்மாவட்டங்களில் கோடை வெயில் குறைந்து, தென்மேற்கு பருவமழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.