பா.ஜ.,வுக்கு எதிராக போராடியதால் என் மீது வழக்கு: ராகுல் பேச்சு
                    30 வைகாசி 2024 வியாழன் 10:57 | பார்வைகள் : 7829
பா.ஜ.,வுக்கு எதிராக போராடி வருவதால் என் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
ஒடிசாவின் பாலசோரில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நான் பா.ஜ.,வுக்கு எதிராக போராடுகிறேன். இதனால், என் மீது அவதூறு மற்றும் கிரிமினல் வழக்குகள் என 24 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எனது எம்.பி., பதவியை பறித்தார்கள். 2.5 ஆண்டு சிறை தண்டனை வழங்கினர். அமலாக்கத்துறை 50 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தியது. ஆனால், உண்மையில் பா.ஜ.,வுக்கு எதிராக நவீன் பட்நாயக் போராடினால், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan