ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

27 சித்திரை 2024 சனி 13:04 | பார்வைகள் : 6189
ஜப்பானில் ரிக்டர் 6.9 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டோக்கியோவில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் போனின் தீவுகள் அல்லது ஒகாசவரா தீவுகள் அமைந்துள்ளன.
மூன்று முக்கிய தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய போனின் தீவுகளின் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு மத்திய டோக்கியோ வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.