Paristamil Navigation Paristamil advert login

விக்ரம் படத்துக்கு வந்த சிக்கல்?

விக்ரம் படத்துக்கு வந்த சிக்கல்?

28 சித்திரை 2024 ஞாயிறு 10:49 | பார்வைகள் : 4098


தங்கலான் படத்திற்கு பிறகு சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் விக்ரம் கூட்டணி இணைந்துள்ளார். இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளியான டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் சண்டை போடும் காட்சிகளுடன் விக்ரம் கத்தி மற்றும் அரிவாள் உடன் இருப்பது போன்ற போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில் படத்தின் போஸ்டருக்கு எதிராக, சமூக ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில், “சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வீர தீர சூரன் படத்தில் விக்ரம் இரண்டு கைகளிலும் கத்தி வைத்துள்ள போஸ்டர் மற்றும் வீடியோக்களை வெளியாகியுள்ளது.

இது போன்ற போஸ்டர்கள் வீடியோக்கள் இன்றைய தலைமுறைகளை அதிக அளவில் பாதிப்படைய செய்வதுடன் தவறான எண்ணங்களையும் உருவாக்குகின்றன. எனவே, படக்குழு மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அவர் புகாரளித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்