கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றித் தெரியுமா?
28 சித்திரை 2024 ஞாயிறு 11:03 | பார்வைகள் : 2104
கற்றாழை எல்லாருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு பொதுவான செடியாகும். இந்த செடியானது, சருமம் மற்றும் கூந்தலின் அழகை பராமரிக்க பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, இது பழங்காலத்திலிருந்தே மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கற்றாழையில் ஏ, சி, ஈ, பி போன்ற வைட்டமின்களும்; கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கற்றாழை ஜூஸ் குடித்தால், ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஆனால் சிலருக்கு அது தெரிவதில்லை. அவர்களுக்கான பதிவுதான் இது..சரி வாங்க..இப்போது
கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்கும்: கற்றாழை ஜூஸ் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுப்பதால், உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். ஆகையால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ஜூஸ் சிறந்த தேர்வாகும்.
செரிமான பிரச்சனைகள் நீங்கும்: கற்றாழையில் உள்ள நொதிகள் மற்றும் நார்ச்சத்துகள் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது. இதனால் வயிறு சுத்தமாக செரிமான பிரச்சனைகள் நீங்குகிறது.
முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது: கற்றாழை ஜூஸ் குடித்தால், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். இதனால், சருமம் பளபளப்பது மட்டுமின்றி, முடி கொட்டும் பிரச்சனையும் நீங்கும்.
நச்சுக்களை நீக்கும்: நொறுக்குத் தீனி உள்ளிட்ட பிற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நச்சுகள் சேரும். கற்றாழை ஜூஸ், இந்த நச்சு கூறுகளை நீக்கி, உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
பல் ஆரோக்கியத்திற்கு நல்லது: கற்றாழை ஜூஸ் குடித்தால், வாய் துர்நாற்றத்தை குறைப்பது மட்டுமின்றி, ஈறுகள் மற்றும் பற்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: கற்றாழை ஜூஸ் தினமும் குடித்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
வீக்கத்தைக் குறைக்கும்: கற்றாழை ஜூஸ் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் இது குடல் நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.