Paristamil Navigation Paristamil advert login

சீன நகரை தாக்கிய பயங்கர சூறாவளி -  5 பேர் பலி, 33 பேர் காயம்

சீன நகரை தாக்கிய பயங்கர சூறாவளி -  5 பேர் பலி, 33 பேர் காயம்

28 சித்திரை 2024 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 2649


சீனாவில் சூறாவளி தாக்கியதில் 5 பேர் பலியாகினர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.

தெற்கு சீனாவின் நகரமான Guangzhou-வை பயங்கர சூறாவளி தாக்கியது. நகரின் பையுன் (Baiyun) எனும் மாவட்டத்தை சூறாவளி தாக்கியதில் 141 தொழிற்சாலை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.

குடியிருப்பு வீடுகள் எதுவும் இடிந்து விழவில்லை என்றும் அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

Guangzhouவில் இந்த தாக்குதலுக்கு 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அம்மாநில தகவல்  நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் நகரின் அவசரகால மேலாண்மை, வானிலை, தீயணைப்பு, நீர்நிலைகள் மற்றும் சுகாதாரத் துறைகளில் இருந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மாத இறுதிவரை தொடர்ந்து கனமழை மற்றும் கடுமையான புயல்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என சீன வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.    

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்