சிக்கன் மசாலா
28 சித்திரை 2024 ஞாயிறு 11:26 | பார்வைகள் : 1377
சிக்கன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிக்கன் கொண்டு செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. சிக்கனை வைத்து எது சமைத்தாலும் அந்த உணவின் சுவையே அலாதிதான்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வேகவைத்த முட்டை - 2
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசி கொள்ளுங்கள்.
பின்னர் அதை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது விழுது சேர்த்து வதக்கவும்.
இதன் பச்சை வாசம் போனவுடன் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வாதிக்கிக்கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கிக்கொள்ளவும்.
பிறகு அதில் வேகாவைத்த கோழியை போட்டு நன்றாக வறுக்கவும்.
இதற்கிடையே அடுப்பில் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பாதியாக வெட்டிய அவித்த முட்டையை வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
சிக்கன் மசாலாக்களுடன் நன்கு பூசப்பட்டிருப்பதை உறுதி செய்தவுடன் வறுத்து வைத்துள்ள முட்டையை அதனுடன் சேர்த்து மெதுவாக கிளறவும்.
இறுதியாக அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்கினால் சுவையான சிக்கன் மசாலா ரெடி.
இதை நீங்கள் சாதம், சப்பாத்தி, ரொட்டி மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.