தடைப்பட்ட TGV.. தொடருந்துக்குள் ஏழு மணிநேரம் சிக்கிக்கொண்ட பயணிகள்!!
28 சித்திரை 2024 ஞாயிறு 13:02 | பார்வைகள் : 9297
லியோனில் இருந்து பரிஸ் நோக்கி வந்துகொண்டிருந்த TGV நெடுந்தூர தொடருந்து ஒன்று, பாதிவழியில் தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஏழுமணிநேரம் பயணிகள் தொடருந்துக்குள் காத்திருந்தனர்.
லியோனின் Part-Dieu நிலையத்தில் இருந்து 6692 இலக்க தொடருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.34 மணிக்கு புறப்பட்டது. காலை 9.30 மணிக்கு பரிசை வந்தடையவேண்டிய குறித்த தொடருந்து, Neuville-sur-Saône (Rhône) நகர் அருகே பயணிக்கும் போது அதன் இயந்திரம் பழுதடைந்து தொடருந்து நின்றது.
உடனடியாக அதனை பழுது பார்க்க முடியவில்லை. பயணிகள் தொடருந்துக்குள் காத்திருக்க, அதனை மீள இயக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.
இறுதியாக, பிற்பகல் 1.30 மணி அளவில் பரிசுக்கு வந்தடைந்தது.
ஏழு மணிநேரம் கழித்து தொடருந்து பரிசை வந்தடைந்தது. பயணிகளுக்கு குடிநீர் உணவு வழங்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan