A13 நெடுஞ்சாலையில் நடைபயிற்சியில் ஈடுபடும் மக்கள்!
28 சித்திரை 2024 ஞாயிறு 18:00 | பார்வைகள் : 3452
A13 நெடுஞ்சாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை அறிந்ததே. வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதசாரிகளும், மிதிவண்டி சாரதிகளும் வீதியினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை பல மக்கள் அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை, பல்வேறு மிதிவண்டி சாரதிகளும் அதில் பயணம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.
Vaucresson முதல் Porte de Saint-Cloud வரை A13 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. அதில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக வீதி மூடப்படுவதாக கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. மே 1 ஆம் திகதி வீதி வீதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதே பகுதியில் மேலும் பல பிளவுகள் கண்டறியப்பட்டுள்ளதால், மறு அறிவித்தல் வரை வீதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.