Paristamil Navigation Paristamil advert login

சிகரத்தை அடைந்த ஜோதிகா..

சிகரத்தை அடைந்த ஜோதிகா..

29 சித்திரை 2024 திங்கள் 06:09 | பார்வைகள் : 5745


நடிகை ஜோதிகா அவ்வப்போது சுற்றுலா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது, அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தங்கியிருப்பது, மின்சாரம் இல்லாத அந்த இடத்தில் சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து வாழ்வது, ட்ரக்கிங் செல்வது, பனி மழையில் நனைவது, அங்கு கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது, உலகின் மிகச் சிறிய ரன்வே கொண்ட விமான நிலையத்தை அடைவது, உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிடுவது உள்ளிட்ட காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

இதுவரை வேறு எந்த நடிகையும் செய்யாத புதிய முயற்சி செய்த ஜோதிகாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே நீங்கள் சிகரத்தை அடைந்து விட்டீர்கள் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா நடித்த ’சைத்தான்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’ஸ்ரீகாந்த்’ உட்பட இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்