பாகிஸ்தான் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன்
29 சித்திரை 2024 திங்கள் 09:01 | பார்வைகள் : 1040
தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
2011ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ODI உலகக்கிண்ணத்தை வென்றபோது பயிற்சியாளராக செயல்பட்டவர் கேரி கிர்ஸ்டன்.
101 டெஸ்ட், 185 ஒருநாள் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியவர் கேரி கிர்ஸ்டன். இவரை லாகூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தங்களது அணியின் பயிற்சியாளராக அறிவித்தார் PCB தலைவர் மொஹ்சின் நக்வி.
முன்னர் பயிற்சியாளராக இருந்த கிராண்ட் பிராட்பர்ன், கடந்த சனவரி மாதம் தனது பொறுப்பில் இருந்து வெளியேறியதால் தலைமை பயிற்சியாளர் இடம் காலியாக இருந்தது.
தற்போது கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட போகிறார். மேலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத் உதவிப் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.