அமெரிக்காவில் முக அழகை அதிகரிக்கும் சிகிச்சைக்குச் சென்ற பெண்ணால் அதிர்ச்சி
29 சித்திரை 2024 திங்கள் 09:36 | பார்வைகள் : 3038
அமெரிக்காவில் முக அழகை அதிகரிக்கும் சிகிச்சைக்குச் சென்ற பெண் ஒருவருக்கு HIV தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், vampire facial என்னும் அழகியல் சிகிச்சை செய்துகொண்ட மூன்று பெண்கள் அவ்வகையில் HIV தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், தனது 40 வயதுகளிலிருக்கும் பெண்ணொருவருக்கு HIV தொற்று கண்டறியப்பட்டது.
விசாரணையில், அவர், vampire facial என்னும் அழகியல் சிகிச்சை செய்துகொண்டது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட ஸ்பாவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அங்கு அந்த அழகியல் சிகிச்சை மேற்கொண்டவர்களில் மூன்று பேர் HIV தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்தது.
கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசியைப் பயன்படுத்தி டாட்டூ போட்டுக்கொள்ளுதல் முதலான விடயங்களில், அந்த ஊசிகள் மூலம் HIV பரவும் அபாயம் உள்ளது.
இப்படி அழகியல் சிகிச்சை மூலம் HIV தொற்று பரவியுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.