Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு - நிபுணர்கள் எச்சரிக்கை

கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு - நிபுணர்கள் எச்சரிக்கை

29 சித்திரை 2024 திங்கள் 09:57 | பார்வைகள் : 6073


கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகை புழு சுமார் மூன்று அடிகள் வரையில் வளரும் எனவும், இது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஹமில்டன் மற்றும் நியூமார்கட் பகுதிகளில் இந்த புழு வகை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை புழுக்கள் பொதுவாக தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படுபவை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகை புழு விரைவில் பரவக்கூடியவை என புழு தொடர்பான நிபுணரும் ஆய்வாளருமான ஜோன் ரெய்னோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வகை புழுக்களை கையில் தொட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வகை புழுக்கள் கடந்த காலங்களில் கியூபெக் மாகாணத்திலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்