Paristamil Navigation Paristamil advert login

பிரேக்கப் குறித்து மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன் காதலர்!

பிரேக்கப் குறித்து மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன் காதலர்!

29 சித்திரை 2024 திங்கள் 11:44 | பார்வைகள் : 6427


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவை சமூகவலைதளத்தில் இருந்து அன்ஃபாலோ செய்ததோடு மட்டுமல்லாமல், அவருடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இந்த விஷயம் அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இதற்கு முன்பு லண்டைச் சேர்ந்த மாடல் ஒருவரைக் காதலித்தார் ஸ்ருதி. அது பிரேக்கப் ஆக, அதன் பின்புதான் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனுவை காதலிக்கத் தொடங்கினார்.

கடந்த நான்கு வருடங்களாக மும்பையில் ஒரே வீட்டிலும் இருவரும் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார் ஸ்ருதி. இந்நிலையில், இருவருக்குமிடையேயான உறவில் பிரேக்கப் என்ற செய்தி ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கியது.

இதுபற்றி ஸ்ருதி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. ஆனால், இது ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் என்றும் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் நிறைய விஷயங்களை இந்தக் காலக்கட்டத்தில் தெரிந்து கொண்டதாகவும் சொல்லி தனது பிரேக்கப்பை மறைமுகமாக உறுதி செய்தார்.

இந்நிலையில், பாலிவுட் ஊடகம் ஒன்று சாந்தனுவிடம் ஸ்ருதியுடனான பிரேக்கப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறது. அதற்கு அவர், ‘மன்னித்து விடுங்கள்! இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்’ என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்