இலங்கையில் அண்ணனை கத்திரிக்கோலினால் குத்திய தம்பி!
29 சித்திரை 2024 திங்கள் 12:00 | பார்வைகள் : 4520
இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரன் கத்திரிக்கோலினால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட பொலிஸார் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan